தேசியத் தலைவர் உயிருடனும் நலமுடனும் உள்ளார் - புலிகளின்சர்வதேச புலனாய்வுத்துறை!
தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் கொலை செய்யப்பட்டார் என்று சிறிலங்கா அரசாங்கமும் அதன் இராணுவமும் மேற்கொண்டு வருகின்ற பொய்ப்பிரச்சாரத்தினை திட்டவட்டமாக மறுத்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச புலனாய்வுத்துறையின் பொறுப்பாளர் அறிவழகன் தேசியத் தலைவர் உயிருடனும் நலமுடனும் உள்ளார் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.இது தொடர்பாக அறிவழகன் 'தமிழ்நெட்' இணையத்தளத்துக்கு மேலும் தெரிவித்துள்ளதாவது:எமது பாசத்துக்குரிய தேசியத் தலைவர் தமிழ் மக்களை எதிர்காலத்தில் சரியான தருணத்தில் தொடர்பு கொள்வார்.தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு உலகு எங்கும் பரந்து விரிந்து ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் ஆதரவுக்குரலை அடக்கி ஒடுக்கும் முகமாக சிறிலங்கா அரசாங்கம் தமிழீழ தேசியத் தலைவர் தொடர்பான பொய்ப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுவதில் முனைப்பாக உள்ளது என்றார் அவர்.
Sunday, May 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment